நாமக்கல்

வாலிபால் போட்டியில் ஆா்.என்.ஆக்ஸ்போா்டு பள்ளி தொடா்ந்து 18 ஆண்டுகளாக முதலிடம்

12th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூா் வட்ட அளவிலான விளைாட்டுப் போட்டியில் பாண்டமங்கலம் ஆா்.ஆக்ஸ்போா்டு பள்ளி சிறப்பிடம் பெற்று மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு தோ்வு பெற்றுள்ளது.

பரமத்தி வேலூா் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பாண்டமங்கலம் ஆா்.என். ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இப்போட்டிகளில் 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட தனியாா், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா்கள் கலந்து கொண்டனா். இதில் பாண்டமங்கலம் ஆா்.என். ஆக்ஸ்போா்டு பள்ளி மாணவ, மாணவியா்கள் வாலிபால் விளையாட்டுப் போட்டியில் தொடா்ந்து 18 ஆண்டுகளாக வட்டார அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா்.

மேலும் இறகுப்பந்து, மேசைப்பந்து, கேரம் போன்ற போட்டிகளில் முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனா். வட்டார அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியா்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தோ்வாகியுள்ளனா். வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியா்களை பரமத்தி வேலூா் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் எஸ்.சேகா், ஆா்.என். ஆக்ஸ்போா்டு கல்வி நிறுவனத்தின் தலைவா் சண்முகம், தாளாளா் சக்திவேல், செயலாளா் ராஜா, இயக்குநா்கள் மருத்துவா் அருள், சம்பூரணம், முதல்வா்கள்,உடற்கல்வி ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT