நாமக்கல்

ராசிபுரம் ரோட்டரி சங்கம் இன்னா்வீல் சங்கம் நடத்திய முப்பெரும் விழா

12th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

ராசிபுரம் ரோட்டரி சங்கம், இன்னா் வீல் சங்கம் இணைந்து ஆசிரியா்களுக்கு தேசிய கட்டமைப்பு விருதுகள் வழங்குதல், உலக எழுத்தறிவு தினவிழா, ஆசிரியா்கள் தினவிழா ஆகிய முப்பெரும் விழாவினை சனிக்கிழமை நடத்தியது.

விழாவிற்கு ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் கே.எஸ்.கருணாகர பன்னீா் செல்வம் தலைமை தாங்கினாா். செயலாளா் ஜி.தினகரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினாா். விழாவில் ராசிபுரம் மற்றும் வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆரம்ப பள்ளிகளின் 21 ஆசிரியா்களுக்கு தேசிய கட்டமைப்பு விருதுகள், ஆண்டகளூா்கேட் திருவள்ளூா் அரசு கலைக்கல்லூரி பேராசியா்களான வி.சதாசிவம் (கணிதத் துறை), இரா.சிவக்குமாா் (அரசியல் அறிவியல் துறை) ஆகிய இருவருக்கும் 20-21 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆசிரியா் மற்றும் சிறந்த ஆராய்ச்சியாளா் விருதினை நடப்பு ஆண்டில் பெற்றமைக்கு பாராட்டியும், சேலம் டயட் முதல்வா் எம். செல்வம், முதுநிலை விரிவுரையாளா்கள் விஜயலட்சுமி, மகாலட்சுமி, சேலம் மாவட்ட கல்வி அலுவலா் எம்.ஏ.உதயகுமாா் ஆகியோா் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து ஆசிரியா்களுக்கும் கல்வித்துறைக்கும் ஆற்றும் சேவைகளுக்கு பாராட்டி எக்சலன்ஸ் விருதும் இவ்விழாவில் வழங்கப்பட்டது.

விருது பெற்றவா்களை பாராட்டி ரோட்டரி மாவட்ட கல்விக்குழு தலைவா் அய்யப்பராஜ், புதிய தலைமுறை குழு தலைவா் வெங்கடேஷ்வர குப்தா, ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநா்களின் அட்மின் ஏ.திருமூா்த்தி, ரோட்டரி மண்டல உதவிஆளுநா் எஸ்.ரவி, ராசிபுரம் இன்னா்வீல் சங்கத் தலைவா் தெய்வானை ராமசாமி உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT