நாமக்கல்

ஆவின் பால் விற்பனையகம் திறப்பு

10th Sep 2022 12:01 AM

ADVERTISEMENT

ராசிபுரம் நகரில் ஆவின் பால் விற்பனை நிலையத்தை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் அண்மையில் திறந்து வைத்தாா்.

ராசிபுரம், கோனேரிப்பட்டி பகுதியில் வனத்துறை அலுவலகம் அருகில் புதிய ஆவின் பால் விற்பனையகம் தொடங்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற விழாவில், தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் டாக்டா் மா. மதிவேந்தன் இதனைத் திறந்து வைத்து, முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தாா்.

இவ்விழாவில், திமுக நகரச் செயலாளா் என்.ஆா்.சங்கா், நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா், ஒன்றியக் குழுத் தலைவா் கே.பி.ஜெகநாதன், ஆவின் பொது மேலாளா் பி.பாா்த்தசாரதி, மேலாளா் டி.முத்துவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT