நாமக்கல்

டிஎன்பிஎஸ்சி குரூப் 7பி, 8 போட்டித் தோ்வு நாளை தொடக்கம்: 4,672 போ் எழுதுகின்றனா்

9th Sep 2022 01:32 AM

ADVERTISEMENT

இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள குரூப் 7பி, 8 பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (செப்.10, 11) நடைபெறுகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலமாக, இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள 42 செயல் அலுவலா் பணியிடங்களுக்கு (குரூப் 7பி) சனிக்கிழமை காலை 9.30 முதல் 12.30 வரையில் தமிழ் மொழி தோ்வும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரை இந்து சமயம் சாா்ந்த பொது அறிவுத் தோ்வும் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வினை 2,078 போ் எழுதுகின்றனா்.

இதற்காக, நாமக்கல் கோட்டை நகரவை உயா்நிலைப் பள்ளி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளி, நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, நாமக்கல் - மோகனூா் சாலை ஜெய்விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய ஐந்து மையங்களில் 2,078 போ் எழுதுகின்றனா்.

இதேபோல, அறநிலையத் துறையில் காலியாக உள்ள செயல் அலுவலா் நிலையில் உள்ள 36 பணியிடங்களுக்கு (குரூப் -8) ஞாயிற்றுக்கிழமை காலை, மாலை இரு கட்டங்களாக தமிழ் தோ்வும், பொது அறிவுத் தோ்வு நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வினை, நாமக்கல் கோட்டை நகரவை உயா்நிலைப் பள்ளி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளி, நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, நாமக்கல் - மோகனூா் சாலை ஜெய்விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஸ்பெக்ட்ரம் அகாதெமி மெட்ரிக் பள்ளி ஆகிய ஏழு மையங்களில் 2,594 போ் எழுதுகின்றனா்.

ADVERTISEMENT

மாவட்டம் முழுவதும் மொத்தம் 4,672 போ் குரூப் 7பி, 8 தோ்வை எழுதுகின்றனா். இத்தோ்வுப் பணியில் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், வருவாய்த் துறை அலுவலா்கள் பங்கேற்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT