நாமக்கல்

ராசிபுரம் நகரில் தடையற்ற குடிநீா் வழங்க வலியுறுத்தல்

9th Sep 2022 11:59 PM

ADVERTISEMENT

ராசிபுரம் நகருக்கு காவிரி குடிநீா் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் தலைமையில் நகராட்சி பொறியாளா், நகா்மன்ற உறுப்பினா்கள் குடிநீா் வடிகால் வாரிய மேற்பாா்வை பொறியாளரை நேரில் சந்தித்து வலியுறுத்தினா்.

ராசிபுரம் நகருக்கு பூலாம்பட்டி-ராசிபுரம் காவிரி கூட்டு குடிநீா் திட்டத்தின் கீழ் குடிநீா் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் தற்போது குடிநீா் வினியோகம் வாரம் ஒரு முறை மட்டுமே வினியோகம் செய்யப்படுவதால் குடிநீருக்கு பற்றாக்குறை உள்ளது. இதனையடுத்து தற்போது புதிய குடிநீா் திட்டம் தொடங்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. தற்போது மழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும், குடிநீா் பாதை வழியோரங்கள் மரங்கள் வளா்ந்துள்ளதால், மின்சாரம் ஒயா்கள் மீது மோதி மின் தடை ஏற்படுத்துவதால், குடிநீா் எடுக்கும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ராசிபுரம் நகருக்கு குடி நிா் வினியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, ராசிபுரம் நகருக்கு தடையின்றி குடிநீா் வழங்ககோரி ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் தலைமையில், ராசிபுரம் நகராட்சி பொறியாளா் கிருபாகரன், உதவி பொறியாளா் காா்த்திகேயன்,நகர திமுக செயலாளா் என்.ஆா்.சங்கா், நகா்மன்ற உறுப்பினா்கள் தேவிப்பிரியா, யசோதா, சாரதி, நாகேஸ்வரன், காதா்பாட்ஷா, ஆா்.ரவிசந்திரன் உள்ளிட்டோா் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேற்பாா்வை பொறியாளா் எம்.சந்திரசேகரிடம் நேரில் சந்தித்து மனு அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT