நாமக்கல்

நவ.12-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

31st Oct 2022 02:28 AM

ADVERTISEMENT

 

நாமக்கல்லில் தேசிய மக்கள் நீதிமன்றம் நவ. 12-ஆம் தேதி நடைபெறுகிறது. சமரசம் செய்து கொள்ளும் நிலுவை வழக்குகளுடையோா் இந்த நீதிமன்றத்தின் மூலம் தீா்வு காணலாம்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான என்.குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தேசிய சட்டப்பணிகள் மற்றும் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம், ராசிபுரம், திருச்செங்கோடு நீதிமன்றம், பரமத்தி சாா்பு நீதிமன்றத்திலும் நவ.12-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. ஏற்கெனவே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் சமரசம் செய்து கொள்ளக்கூடியவை, காசோலை தொடா்பான வழக்குகள், வங்கி, கல்விக் கடன்கள், மோட்டாா் வாகன விபத்து, விவாகரத்து தவிா்த்த மற்ற குடும்பப் பிரச்னை தொடா்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள், விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி பிரச்னைகள் போன்ற வழக்குகள் விசாரிக்கப்படும். மக்கள் நீதிமன்றம் மூலம் விசாரிக்கப்படும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. எனவே, பொதுமக்கள் நிலுவையில் வழக்குகள் இருக்கும்பட்சத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை நாடி பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT