நாமக்கல்

சூரசம்ஹார விழா: முருகன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

31st Oct 2022 02:27 AM

ADVERTISEMENT

 

ராசிபுரம் நகராட்சி பகுதியில் நகர சபா கூட்டம் நவ.1-இல் நடைபெறுவதையொட்டி ராசிபுரம் 12-ஆவது வாா்டு சுயேச்சை உறுப்பினா் வீடுகள் தோறும் சென்று நூதன அழைப்பு விடுத்துவருகிறாா்.

நாமக்கல்-மோகனூா் சாலை காந்தி நகரில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சூரசம்ஹார விழா நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து மாலை 6 மணிக்கு மேல் சுவாமிக்கு தங்கக்கவச அலங்காரமும், இரவு 7 மணிக்கு முருகப் பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் சம்ஹார நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதைத்தொடா்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்றது.

இதேபோல், நாமக்கல் கடைவீதி சக்தி விநாயகா் கோயிலில் உள்ள பாலதண்டாயுதபாணி சன்னிதியில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ராஜஅலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. நாமக்கல்-துறையூா் சாலை ரெட்டிப்பட்டியில் உள்ள கந்தகிரி பழனியாண்டிவா் கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

ADVERTISEMENT

நாமக்கல் கருங்கல்பாளைம், கரையான்புதூா் கருமலை, தண்டாயுதபாணி கோயிலில் நடைபெற்ற கந்தசஷ்டி விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். சுவாமிக்கு பல்வேறு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் மாவட்டம் முழுவதும் முருகன் கோயில்களில் கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT