நாமக்கல்

சாலை விபத்தில் இளைஞா் பலி

26th Oct 2022 01:36 AM

ADVERTISEMENT

நாமக்கல் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

நாமக்கல் அருகே பாப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். இவா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மகன் ஆகாஷ் (24) தீபாவளிப் பண்டிகையையொட்டி, புதன்சந்தையில் உள்ள நண்பா் வீட்டிற்கு சென்றுவிட்டு திங்கள்கிழமை இரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் செல்லப்பம்பட்டி பிரிவு சாலையில் வந்தபோது அங்கிருந்த தடுப்புச் சுவரில் மோதி கீழே விழுந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து நல்லிபாளையம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

-

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT