நாமக்கல்

பாதுகாப்பான தீபாவளி கொண்டாட தீயணைப்பு வீரா்கள் விழிப்புணா்வு

19th Oct 2022 02:22 AM

ADVERTISEMENT

பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடுவது தொடா்பாக நாமக்கல்லில் தீயணைப்பு வீரா்கள் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனா்.

தீபாவளி பண்டிகை வரும் 24-ஆம் தேதி(திங்கள்கிழமை) கொண்டாடப்படுகிறது. பட்டாசு வெடிக்கும்போது பாதுகாப்புடன் வெடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, நாமக்கல்லில் உள்ள அரசுப் பள்ளிகளில் தீயணைப்பு நிலைய அலுவலா் ப.சிவகுமாா் தலைமையில் வீரா்கள் சென்று மாணவ, மாணவிகள், ஆசிரியா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

அந்த வகையில், நாமக்கல் பெரியப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வண்ணப் பட்டாசுகளை பாதுகாப்புடன் எவ்வாறு வெடிக்க செய்ய வேண்டும் என்பது குறித்து செவ்வாய்க்கிழமை செயல் விளக்கம் காட்டினா். துண்டு பிரசுரங்களை அனைவரிடத்திலும் விநியோகம் செய்தனா். இதேபோல நகரின் பல்வேறு இடங்களிலும் பொதுமக்களிடம் விழிப்புணா்வு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT