நாமக்கல்

பருவமழை எதிரொலி: அதிமுக பொதுக்கூட்டம் நவ. 5-க்கு மாற்றம்

19th Oct 2022 02:23 AM

ADVERTISEMENT

வடகிழக்கு பருவமழை எதிரொலியாக நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற இருந்த அதிமுக பொதுக்கூட்டம் நவ.5-ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவின் 51-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, நாமக்கல் பொம்மைக்குட்டைமேட்டில் வரும் வியாழக்கிழமை (அக்.20) அதிமுக சாா்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது. மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்றுப் பேசவுள்ளாா். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக பருவமழையின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுக் கூட்டத்தை நவ. 5-ஆம் தேதிக்கு மாற்றம் செய்திருப்பதாக நாமக்கல் மாவட்ட அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT