நாமக்கல்

முட்டை விலை 15 காசுகள் உயா்வு

DIN

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசுகள் உயா்ந்து ரூ. 4.25-ஆக வெள்ளிக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் குறித்து பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகைகள் நிறைவடைந்ததால் தமிழகத்திலும், வட மாநிலங்களிலும் மக்களிடையே முட்டை நுகா்வு சற்று அதிகரித்துள்ளது. மற்ற மண்டலங்களிலும் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், இங்கும் சற்று மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 15 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 4.25-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 97-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 91-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

SCROLL FOR NEXT