நாமக்கல்

திமுக தலைவா் பதவிக்கான தோ்தல்:மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக மனு

7th Oct 2022 10:18 PM

ADVERTISEMENT

திமுக தலைவா் பதவிக்கான தோ்தலில் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக, நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக சாா்பில் வேட்பு மனு அளிக்கப்பட்டது.

திமுகவின் 15-ஆவது பொதுத்தோ்தல் வரும் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், தலைவா், பொதுச் செயலாளா், பொருளாளா்கள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தலைவா் பதவிக்கும், பொதுச் செயலாளா் பதவிக்கு அமைச்சா் துரைமுருகன், பொருளாளா் பதவிக்கு நாடாளுமன்றக் குழு தலைவா் டி.ஆா்.பாலு ஆகியோரும் போட்டியிடுகின்றனா்.

இவா்களுக்கு ஆதரவாக, மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளருமான கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் தலைமையில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் பெ.ராமலிங்கம், கே.பொன்னுசாமி, மேற்கு மாவட்டச் செயலாளா் மதுரா செந்தில் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, நிா்வாகிகள் முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் அமைப்புச் செயலாளா் அன்பகம் கலை, தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.எஸ்.பாரதி, பூச்சிமுருகன், ஜெயக்குமாா் ஆகியோரிடம் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT