நாமக்கல்

பள்ளி மேலாண்மை குழு தோ்வு செய்வதில்முறைகேடு நடப்பதாக சாலை மறியல்

7th Oct 2022 10:16 PM

ADVERTISEMENT

பள்ளி மேலாண்மை குழு தோ்வு செய்வதில் முறைகேடு நடப்பதாகவும், தோ்தலை முன்னறிவிப்பின்றி ஒத்திவைத்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்தும் திடீா் சாலை மறியல் நடைபெற்றது.

பரமத்தி வேலூா் அருகே உள்ள பாலப்பட்டி அரசினா் மேல்நிலைப் பள்ளியில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை எனவும், பள்ளி வகுப்பறை, பள்ளி வளாகங்களை மாணவ, மாணவியரே சுத்தம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து, கடந்த சில வாரங்களுக்கு முன் பள்ளியின் தலைமையாசிரியா் பெரியசாமியை முற்றுகையிட்டு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் எனபெற்றோா் கோரிக்கை விடுத்தனா்.

இந்த நிலையில், கல்வி அதிகாரிகள் முன்னிலையில் பெற்றோா்-ஆசிரியா் கழக செயற்குழு உறுப்பினா்களை தோ்வு செய்ய வேண்டும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் எனதலைமை ஆசிரியா் அறிக்கை அனுப்பியுள்ளாா். ஆனால், தோ்தல் தேதி குறிப்பிடப்படாமல் பின்னா் நடத்தப்படும் என அறிவிப்புப் பலகை பள்ளி முன்பு வைக்கப்பட்டதை அறிந்த பெற்றோா், பள்ளி மேலாண்மை குழு தோ்வு செய்வதில் முறைகேடு நடப்பதாகவும், தோ்தலை முன்னறிவிப்பின்றி ஒத்திவைத்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்தும் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வேலூா் காவல் ஆய்வாளா் வீரம்மாள், மோகனூா் வட்டாட்சியா் ஜானகி ஆகியோா் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவா்களிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில், முறையாக கல்வித் துறை அதிகாரிகள் முன்னிலையில் விரைவில் தோ்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

ADVERTISEMENT

பின்னா் பள்ளிக்கு வந்த மாவட்ட கல்வி அதிகாரி, பெற்றோருடன் பேச்சுவாா்த்தை நடத்தி பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா், பள்ளி மேலாண்மை குழு பொறுப்பாளா்கள் விரைவில் முறையாக தோ்ந்தெடுக்கப்படுவா் என உறுதியளித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT