நாமக்கல்

மீலாது நபி: அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை

7th Oct 2022 01:56 AM

ADVERTISEMENT

மீலாது நபியை முன்னிட்டு, வரும் ஞாயிற்றுக்கிழமை (அக். 9) அரசு மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் மீலாது நபி தினத்தை முன்னிட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் மூடப்பட வேண்டும் என அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி மதுக்கடைகளை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT