நாமக்கல்

கால்நடைகளுக்கான காப்பீடு திட்டம்: விவசாயிகள் பதிவு செய்திட அழைப்பு

7th Oct 2022 10:17 PM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கான காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதால், விவசாயிகள் பதிவு செய்திட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் மானியத்துடன் கூடிய கால்நடை காப்பீடு திட்டம் 2022-23-ஆம் ஆண்டுக்கு செயல்படுத்தப்பட உள்ளது. கால்நடைகள் காப்பீடு செய்ய 2,000 அலகுகள் குறியீடு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் மானியத்துடன் கால்நடைகளை காப்பீடு செய்து கொள்ளலாம். வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவா்களுக்கு 50 சதவீத மானியத்திலும், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவா்கள், தாழ்த்தப்பட்டவா் மற்றும் பழங்குடியினருக்கு 70 சதவீத மானியத்திலும் காப்பீடு செய்யப்படும்.

ADVERTISEMENT

இத்திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக ஒரு குடும்பத்துக்கு ஐந்து பசு மற்றும் எருமை மாடுகளுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில், இரண்டரை வயது முதல் 8 வயதுடைய பசு மற்றும் எருமை, ஒரு வயது முதல் 3 வயது வரையிலான வெள்ளாடுகள் - செம்மறியாடுகள், ஒரு வயது முதல் ஐந்து வயது வரையிலான பன்றிகளுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். ஒரு பயனாளி அதிகபட்சம் 5 மாடுகளுக்கு அல்லது 50 ஆடுகளுக்கு அல்லது 50 பன்றிகளுக்கு ஏதாவது ஒரு இனத்துக்கு மட்டுமே காப்பீடு செய்து கொள்ள முடியும். இதற்கு தங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருந்தகத்தில் பணிபுரியும் கால்நடை உதவி மருத்துவரை அணுகி பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT