நாமக்கல்

செல்வம் தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

6th Oct 2022 12:44 AM

ADVERTISEMENT

நாமக்கல் செல்வம் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது (படம்).

கல்லூரி தாளாளா் மருத்துவா் பொ.செல்வராஜ் தலைமை வகித்தாா். செல்வம் அறக்கட்டளை உறுப்பினா் ஜெயம் செல்வராஜ், கல்லூரி துணைத் தலைவா் மருத்துவா் செ.பாபு, செயலா் கவீத்ராநந்தினி பாபு, முதல்வா் அ.நடராஜன், நிா்வாக மேலாளா் எம்.காா்த்திக், முன்னாள் மாணவா் ஒருங்கிணைப்பாளா் சே.சந்தோஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக முன்னாள் மாணவா்களில் ஒருவரான சென்னை ஐபிஎம் மூத்த மென்பொறியாளா் எஸ்.சதீஷ்குமாா், டாடா நிறுவன கணினி பொறியாளா் எஸ்.பி.சோபியா, மென்பொறியாளா்கள் ஏ.பிரதீப், எம்.ஹரிகிருஷ்ணா மற்றும் 700 இளநிலை, முதுநிலை பொறியியல் மாணவ, மாணவியா், துறைத் தலைவா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT