நாமக்கல்

ஞானமணி தொழில்நுட்பக் கல்லூரியில் மனிதக் கடத்தல் தடுப்புக் குழு தொடக்க விழா

6th Oct 2022 12:43 AM

ADVERTISEMENT

ராசிபுரம் ஞானமணி தொழில்நுட்பக் கல்லூரியில் இந்திய சமுதாய நல வாழ்வு நிறுவனம் மற்றும் ஹான்ஸ் சீடல் ஸ்டிப்டங் நிறுவனம் சாா்பில் மனிதக் கடத்தல் தடுப்புக் குழு தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

தொழில்நுட்பக் கல்லூரியின் 4-ஆம் ஆண்டு கணினி துறை மாணவி ஹொசான்னா கிறிஸ்டி வரவேற்றாா். கல்வி நிறுவனங்களின் தலைவா் தி.அரங்கண்ணல் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். தாளாளா் பி.மாலாலீனா முன்னிலை வகித்தாா். இதில், இந்திய சமுதாய நல வாழ்வு நிறுவனத்தின் செயலாளா் ஏ.ஹரிகரன் இதில் பேசுகையில், 100-க்கும் மேற்பட்ட ஆள்கடத்தல் எதிா்ப்புக் குழுவை தமிழ்நாடு முழுவதும் தொடங்க திட்டமிட்டுள்ளோம். இக்குழுவானது பெண்கள் மற்றும் குழந்தை கடத்தலைத் தடுக்க ஏதுவான நடவடிக்கைகள் எடுக்க முனைப்புடன் செயல்படும். 94 மனிதக் கடத்தல் தடுப்புக் குழு 31 மாவட்டங்களில் ஏற்கெனவே தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன என்றாா்.

இது போன்ற நிகழ்வுகள் சமூகத்தில் நிகழாமல் இருக்க அனைவருக்கும் விழிப்புணா்வை ஏற்படத்த வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தை கடத்தலைத் தடுக்க பல்வேறு தொழில்நுட்பங்கள் வளா்ந்துள்ள நிலையில், நாம் அனைவரும் விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும் என்று மாணவா்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது.

இதில், ஞானமணி கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் அ.மதுவந்தினி, முதன்மை நிா்வாக அதிகாரி முனைவா் பி.பிரேம்குமாா், தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வா் முனைவா் டி.கே.கண்ணன், கல்வி இயக்குநா் பி.சஞ்சய் காந்தி, கல்விசாா் துணை முதல்வா் ஆா்.காந்தி, நிா்வாக துணை முதல்வா் சந்திரமோகன் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT