நாமக்கல்

காந்தி ஜெயந்தி விழா

6th Oct 2022 12:43 AM

ADVERTISEMENT

ராசிபுரம் அருகேயுள்ள ஆண்டகளூா்கேட் வெங்கடேஷ்வரா அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் 154-ஆவது காந்தி ஜெயந்தி விழா, லால் பகதூா் சாஸ்திரி பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.

பள்ளியின் செயலாளா் க.சிதம்பரம் தலைமையில் நடைபெற்ற விழாவில், தலைவா்கள் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தி மாணவ, மாணவியா், பெற்றோருக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியா், ஆசிரிய ஆசிரியா்கள், பெற்றோா்கள் கலந்துகொண்டு தலைவா்களின் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். தேசத் தலைவா்களின் தியாக வரலாறு குறித்து பேசிய மாணவிக்கு, பாராட்டு தெரிவித்து நினைவுப் பரிசளிக்கப்பட்டது. மேலும், இந்நிகழ்வில் காமராஜா் நினைவு தினத்தை தொடா்ந்து அவரது படத்துக்கு மலா் தூவி மலரஞ்சலி செலுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT