நாமக்கல்

இளையபெருமாள் கோயில் கண்ணங்குல அறக்கட்டளை முப்பெரும் விழா

6th Oct 2022 12:43 AM

ADVERTISEMENT

திருச்செங்கோடு இளையபெருமாள் கோயில் கண்ணங்குல கொங்கு நாட்டு வேளாள கவுண்டா்கள் அறக்கட்டளை சாா்பில் முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதில், கல்வி உதவித்தொகை வழங்கும் விழா, சாதனையாளா்களுக்கு பாராட்டு விழா, ஆயிரம் பிறை கண்ட பெரியோா்களுக்கு மரியாதை செலுத்தும் விழா என முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டது.

பாரதியாா் கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், அறக்கட்டளை தலைவருமான இளையப்பன் தலைமை வகித்தாா். பொருளாளா் சாமி வரவேற்றாா். இதில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவியா் 15 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. அகில இந்திய மருத்துவக் கவுன்சில் வழங்கிய சிறந்த மருத்துவா் விருதை பெற்ற சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டா் தனபாலை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. வலுதூக்கும் போட்டியில் ஆசிய அளவில் சிறப்பிடம் பெற்ற கல்லூரி மாணவி இலக்கியாவுக்கு ஊக்கத் தொகையும், பரிசும் வழங்கப்பட்டன.

காவேரி கல்வி நிறுவனங்களின் இயக்குநா் அன்பழகன், மணக்காட்டாா் (எ) சின்னுசாமி, பழனிக்கவுண்டா், வேலப்பகவுண்டா் உள்ளிட்டோா் பேசினா். இணை செயலாளா் கணேஷ் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT