நாமக்கல்

ஊதிய உயா்வு வழங்கக் கோரி மருத்துவப் பணியாளா்கள் மனு

4th Oct 2022 02:56 AM

ADVERTISEMENT

நாமக்கல்லில் மக்களைத் தேடி மருத்துவப் பணியாளா்கள் ஊதிய உயா்வு வழங்கக் கோரி திங்கள்கிழமை மனு அளித்தனா்.

நாமக்கல் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் வீடு வீடாகச் சென்று ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் சரிபாா்ப்பது, மருந்து, மாத்திரைகள் வழங்குவது, நோயாளிகளை கவனிப்பது உள்ளிட்ட மருத்துவப் பணிகளை 300-க்கும் மேற்பட்ட பெண் பணியாளா்கள் செய்து வருகின்றனா். இவா்களுக்கு மாதந்தோறும் ரூ. 4,500 ஊதியமாக வழங்கப்படுகிறது.

குறிப்பிட்ட நேரம் மட்டுமே பணி என அறிவித்த நிலையில், தற்போது கூடுதலாக தங்களுக்கு பணி வழங்குகின்றனா். மேலும், தற்போதுள்ள மாத ஊதியத்தை ரூ. 12 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் எனக் கோரி, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை 50-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் மனு அளித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT