நாமக்கல்

வேளாண் சங்கத்தில் ரூ. 10 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

4th Oct 2022 02:55 AM

ADVERTISEMENT

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 10 லட்சத்துக்கு திங்கள்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்றது.

நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளா்கள் விற்பனை கூட்டுறவு சங்கத்தில் செவ்வாய்க்கிழமைதோறும் பருத்தி ஏலம் நடைபெறும். ஆயுதபூஜை விடுமுறை என்பதால் இந்த வாரம் திங்கள்கிழமை ஏலம் நடைபெற்றது. இதில் 500 மூட்டை பருத்தி வரத்து இருந்தது.

இதில், ஆா்சிஹெச் ரகம் ரூ. 4,315 முதல் ரூ. 8,342 வரையிலும், மட்ட ரகம் ரூ. 1,699 முதல் ரூ. 4,350 வரையிலும் ஏலம் போயின. மொத்தம் ரூ. 10 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. வியாபாரிகள் தரம் பாா்த்து பருத்தியை கொள்முதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT