நாமக்கல்

தீபாவளி பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி கோரி 272 விண்ணப்பம்

4th Oct 2022 02:56 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி கோரி 272 விண்ணப்பங்கள் இணைய வழியில் வரப்பெற்றுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி, தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க இணைய வழியில் விண்ணப்பிக்கும் நடைமுறை அமலில் இருந்து வருகிறது. மாவட்ட ஆட்சியா் அந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து அனுமதி வழங்குவாா்.

நிகழாண்டில், தீபாவளி பண்டிகை வரும் 24-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கு செப். 30 வரையில் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் அறிவித்திருந்தாா்.

அதன்படி, மாவட்டம் முழுவதும் இருந்து 272 விண்ணப்பங்கள் வருவாய்த் துறை பிரிவு அலுவலகத்துக்கு இணைய வழியில் வரப்பெற்றுள்ளன. அவற்றை காவல் துறை, தீயணைப்புத் துறை, கோட்டாட்சியா், வட்டாட்சியா், நகராட்சி, உள்ளாட்சி அலுவலகங்களுக்கு அனுப்பி தடையில்லா சான்றிதழ் வழங்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. செப். 30-க்கு பின் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு எதுவும் செய்யப்படாததால், தகுதியான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு பட்டாசுக் கடைகளுக்கான அனுமதியை வழங்குவாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT