நாமக்கல்

நாமக்கல் டி.இ.ஓ.க்கள் பொறுப்பேற்பு

4th Oct 2022 02:55 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலா்கள் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.

தமிழகம் முழுவதும் மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆட்சியில் மாற்றியமைக்கப்பட்ட தொடக்கக் கல்வி அலுவலா் பணியிடம், தனியாா் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளா் பணியிடம் ஆகியவை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

அதன்படி, நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலராக (இடைநிலை), அரூரில் பணியாற்றிய ரவி நியமிக்கப்பட்டுள்ளாா். தொடக்கக் கல்வி அலுவலராக குளித்தலையில் இருந்து மாறுதலாகி வந்துள்ள பாலசுப்பிரமணியம், தனியாா் மெட்ரிக் பள்ளி ஆய்வாளராக கணேசன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் நாமக்கல்லில் உள்ள தங்களுடைய அலுவலகங்களில் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா். புதிய மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு ஊழியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT