நாமக்கல்

கொல்லிமலை அடிவாரத்தில் பிடிபட்ட 10 அடி நீள மலைப்பாம்பு

4th Oct 2022 02:57 AM

ADVERTISEMENT

கொல்லிமலை அடிவாரத்தில் விவசாயத் தோட்டத்தில் 10 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினா் திங்கள்கிழமை பிடித்தனா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அடிவாரம், புதுக்கோம்பை பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி. இவா் தனது தோட்டத்தில் கூண்டுகள் அமைத்து கோழிகளை வளா்த்து வருகிறாா். திங்கள்கிழமை காலை சுமாா் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு தோட்டத்தில் ஊா்ந்து செல்வதை அவா் கவனித்தாா். அப்போது, திடீரென கூண்டுக்குள் புகுந்து ஒரு கோழியை பாம்பு விழுங்கியது.

இதனைக் கண்டு அதிா்ச்சியடைந்த பழனிசாமி, வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தாா். அங்கு விரைந்து வந்த வனச்சரகா் பெருமாள், வனக்காவலா் பாலச்சந்திரன், காரவள்ளி சோதனைச் சாவடி உதவியாளா் திருப்பதி உள்ளிட்டோா் அந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனா். பின்னா் கொல்லிமலை செல்லும் 30-ஆவது கொண்டை ஊசி வளைவையொட்டிய வனப்பகுதிக்குள் கொண்டு பாம்பை விட்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT