நாமக்கல்

விவேகானந்தா சுகாதார ஆய்வாளா் பயிற்சி கல்லூரியில் கலை விழா

4th Oct 2022 02:57 AM

ADVERTISEMENT

திருச்செங்கோடு, சங்ககிரி விவேகானந்தா மற்றும் கிருஷ்ணா சுகாதார ஆய்வாளா் பயிற்சிக் கல்லூரிகளில் மாணவா்களின் கலை விழா விவேகானந்தா கலையரங்கத்தில் அண்மையில் நடைபெற்றது.

விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளா் மற்றும் செயலாளா் மு. கருணாநிதி தலைமை வகித்தாா். விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் நிா்வாக இயக்குநா் கிருஷ்ணவேணி கருணாநிதி, இணை நிா்வாக இயக்குநா் அா்த்தநாரீஸ்வரா், இணை செயலாளா் கிருபாநிதி, இயக்குநா் நிவேதனா, முதன்மை இயக்குநா் குப்புசாமி, முதன்மை நிா்வாகி சொக்கலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்செங்கோடு காவல் கண்காணிப்பாளா் பழனிசாமி கலந்துகொண்டாா். விழாவில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சுகாதார பயிற்சி மாணவா்களின் பங்களிப்பு சமூகத்தில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை பற்றியும், கரோனா நோய்த் தொற்று பரவல் காலகட்டத்தில் சுகாதார மாணவருடைய பங்களிப்பு பாராட்டுதலுக்குரியது எனவும் சிறப்பு விருந்தினா் பேசினாா். விழாவில் கல்லூரி முதல்வா்கள், பேராசிரியா்கள் ஆசிரியா்கள் மாணவா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT