நாமக்கல்

காதி கிராஃப்ட்டில் தீபாவளி சிறப்பு கதா் விற்பனை தொடக்கம்

3rd Oct 2022 12:44 AM

ADVERTISEMENT

 

நாமக்கல் காதி கிராஃப்ட் விற்பனை நிலையத்தில், தீபாவளி சிறப்பு கதா் விற்பனையை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் பேருந்து நிலையம் அருகில் உள்ள காதி கிராஃப்ட் விற்பனை நிலையத்தில் காந்தியின் படத்திற்கு ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். இதனைத் தொடா்ந்து, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு கதா் தள்ளுபடி விற்பனையை அவா் தொடங்கி வைத்தாா்.

நாமக்கல் மாவட்டத்தில், ரூ.1.29 கோடி மதிப்பிலான கதா் ரகங்களை விற்பனை செய்ய தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரியம் இலக்கு நிா்ணயம் செய்துள்ளது. கதா் விற்பனையை ஊக்கப்படுத்துவதற்கும் வாடிக்கையாளா்களின் நலன் கருதியும் கதா், பாலியஸ்டா் மற்றும் பட்டு ரகங்களுக்கு 30 சதவீதமும், கம்பளி ரகங்களுக்கு 20 சதவீதமும் சிறப்புத் தள்ளுபடிகள் மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்பட்டுள்ளன. அரசு அலுவலா்களும், ஆசிரியா்களும், தனியாா் நிறுவனங்களில் பணிபுரிவோரும் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இதனைத் தொடா்ந்து, நகராட்சி செலம்பக்கவுண்டா் பூங்காவில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு அவா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் நகராட்சித் தலைவா் து.கலாநிதி, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சி.சீனிவாசன், காதி விற்பனை நிலைய மேலாளா் ஏ.தாரா செளத்ரி மற்றும் தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரிய அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT