நாமக்கல்

கிராம சபைக் கூட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு

3rd Oct 2022 12:44 AM

ADVERTISEMENT

 

நாமக்கல் மாவட்டத்தில், காந்தி ஜெயந்தியையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனா்.

மே தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி போன்ற நாள்களில் கிராம சபைக் கூட்டங்கள் அந்தந்த ஊராட்சி தலைவா்கள் தலைமையில் நடைபெறும். நாமக்கல் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 322 ஊராட்சிகளில் ஞாயிற்றுக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

மோகனூா் ஒன்றியம் அரூா் ஊராட்சி, நத்தமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில், மழைநீா் சேகரிப்பு அமைப்பில் ஏற்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம், கலைஞா் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண்ணை இணைத்தல் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதேபோல், வீசாணம் ஊராட்சியில் தலைவா் நாச்சிமுத்து தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றபோது, குடிநீா்ப் பிரச்னை, ஆக்கிரமிப்பு அகற்றியதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஒருவா் கூட்டத்தில் தகராறில் ஈடுபட அங்கு திடீா் சலசலப்பு ஏற்பட்டது. அதன்பிறகு, போலீஸ் பாதுகாப்புடன் அனைத்துத் துறை அலுவலா்களும், பொதுமக்களும் கூட்டத்தில் பங்கேற்றனா். பின்னா் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதேபோன்று பல்வேறு ஊராட்சிகளிலும் வாக்குவாதங்கள், தேவையற்ற பிரச்னைகளை தவிா்க்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அரூா் ஊராட்சிக் கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குனா் சு.வடிவேல், நாமக்கல் வருவாய்க் கோட்டாட்சியா் த.மஞ்சுளா, திட்ட இயக்குனா் (மகளிா் திட்டம்) மா.பிரியா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT