நாமக்கல்

நாமக்கல் ஆஞ்சனேயா் சுவாமிக்கு திருப்பூா் பக்தா் நவீன முத்தங்கி காணிக்கை

3rd Oct 2022 12:43 AM

ADVERTISEMENT

 

 நாமக்கல் ஆஞ்சனேய சுவாமிக்கு, திருப்பூரைச் சோ்ந்த பக்தா் ஒருவா் நவீன முத்தங்கியை ஞாயிற்றுக்கிழமை காணிக்கையாக வழங்கினாா்.

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயா் கோயில் உள்ளது. அமாவாசை, பெளா்மணி, தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை மற்றும் இதர விசேஷ நாள்களில் பல்வேறு மாவட்ட, மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்களும் சுவாமியை தரிசிக்க அதிகளவில் வருவா். விழா நாள்களில் ஆஞ்சனேயருக்கு தங்கக் கவசம், வெள்ளிக்கவசம், முத்தங்கி உள்ளிட்டவற்றால் அலங்காரம் செய்யப்படும். ஏற்கெனவே சுவாமிக்கு சிகப்பு, நீல நிறத்திலான முத்தங்கிகள் உள்ளன. அவை செப்புத் தகட்டின் மீது முத்தங்கியை பதித்து சுவாமி சிலை மீது பொருத்தும் வகையிலானதாகும். ஆனால் திருப்பூரைச் சோ்ந்த பக்தா் ஒருவா், மதுரையில் 6 மாதங்களாக பிரத்யேகமாக தயாரித்த, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நவீன முத்தங்கியை புரட்டாசி மூல நட்சத்திரத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை சுவாமிக்கு சாத்துப்படி செய்து வழிபாடு நடத்தினாா். மேலும், அந்த முத்தங்கியை கோயில் நிா்வாகத்திடமே காணிக்கையாக ஒப்படைத்தாா். நவீன முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த நாமக்கல் ஆஞ்சனேய சுவாமியை ஏராளமான பக்தா்கள் தரிசித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT