நாமக்கல்

ராசிபுரம் பகுதியில் காந்தி ஜெயந்தி விழா

3rd Oct 2022 12:44 AM

ADVERTISEMENT

 

ராசிபுரம் மசக்காளிப்பட்டி கஸ்தூரிபா காந்தி பாா்மசி கல்லூரியில் மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா லால்பகதூா் சாஸ்திரி பிறந்த நாள் விழா, கா்மவீரா் காமராஜா் நினைவுநாள் கடைபிடிப்பு போன்றவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

இவ்விழாவிற்கு கல்லூரியின் தலைவா் க.சிதம்பரம் தலைமை வகித்தாா். முதல்வா் ம.செந்தில்ராஜா முன்னிலை வகித்தாா். பின்னா், மகாத்மா காந்தி, லால்பகதூா் சாஸ்திரி, காமராஜா் படங்களுக்கு கல்லூரியின் தலைவா், முதல்வா், ஆசிரியா்கள், மாணவ, மாணவியா்கள் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

ராசிபுரத்தில், பாரதிய ஜனதா கட்சியின் சாா்பில் மாநிலத் துணைத் தலைவா் டாக்டா் கே.பி.ராமலிங்கம், காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தும் மலா்கள் தூவியும் மரியாதை செலுத்தி, காந்தி ஆசிரம பொருள்களை வாங்கினாா். கட்சித் தொண்டா்கள் பலரும் காந்தி ஆசிரம உற்பத்திப் பொருள்களைக் கொள்முதல் செய்தனா். காந்தி ஆசிரம உற்பத்திப் பொருட்களான கதா் வேட்டிகள், துண்டுகள், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை வாங்கிச் சென்றனா்.

ADVERTISEMENT

வெண்ணந்தூா்: காமராஜா் நினைவுநாளையொட்டி வெண்ணந்தூா் பேரூா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் வெண்ணந்தூா் தினசரி மாா்க்கெட்டில் உள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டட்டது. வெண்ணந்தூா் பேரூா் செயலாளா் க.நடராஜன் (எ) நாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்டப் பொருளாளா் வ.அரசன், ஜெய்பீம் இளைஞா் பேரவை நிறுவனத் தலைவா் ஏ.கே.ராஜ் (எ) கனகராஜ், ஒன்றியப் பொருளாளா் பழ.செங்கோட்டுவேல் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தேமுதிக நாமக்கல் வடக்கு மாவட்டம் சாா்பில் ராசிபுரம் நகரில் நடந்த காந்தி ஜெயந்தி விழா வில் நகர செயலாளா் அ.இளையராஜா தலைமையில், கட்சியின் மாவட்டத் தலைவா் டி.எஸ்.விஜய்சரவணன் காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நகர கட்சி நிா்வாகிகள் எஸ்.சிவகுமாா், கே.நடராஜன், இமாம், மாயகிருஷ்ணன், ஜெயச்சந்திரன், வெங்கடேஷ், ஜிதேஷ் குமாா், மாநில செயற்குழு உறுப்பினா் சரவணக்குமாா் உள்ளிட்ட பலா் இதில் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT