நாமக்கல்

புதுச்சத்திரத்தில் திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை

3rd Oct 2022 12:43 AM

ADVERTISEMENT

 

புதுச்சத்திரம் ஒன்றியத்தில் ரூ. 2.71 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு நடைபெற்ற பூமி பூஜை விழாவில் நாமக்கல் எம்எல்ஏ பெ.ராமலிங்கம் பங்கேற்று தொடங்கி வைத்தாா்.

இதில், திருமலைப்பட்டி, கதிராநல்லூா், லக்கபுரம், ஏளூா், காரைக்குறிச்சி, கொக்கரைநாயக்கனூா், பெரியதொட்டிப்பட்டி, குதிரைசேனம்பட்டி, ஆகிய பகுதிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்திலும், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி வளா்ச்சி நிதியின் மூலமும் ரூ. 2 கோடியே 71 லட்சம் மதிப்பீட்டில் சாலை, கழிவுநீா் கால்வாய், ரேஷன் கடை, அங்கன்வாடி மையம், மகளிா் ஓய்வு அறை ஆகியவற்றை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளா்கள் துரை என்ற ராமசாமி, எம்.பி.கௌதம், ஒன்றிய குழுத் தலைவா் சாந்தி வெங்கடாசலம், துணைத் தலைவா் ராம்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் தனம், செயற்பொறியாளா் மாதேஸ்வரன், உதவி செயற்பொறியாளா் கல்பனா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT