நாமக்கல்

மாலை நேரத்தில் குழந்தைகளை பணிக்கு அமா்த்தும் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

2nd Oct 2022 02:01 AM

ADVERTISEMENT

 

பள்ளி முடிந்து மாலை நேரத்தில் குழந்தைத் தொழிலாளா்களை பணிக்கு அமா்த்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளா் நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) எல்.திருநந்தன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

‘நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி செல்லும் குழந்தைகள் மாலை நேரங்களில் பணிக்குச் செல்கின்றனா். இதனால் மறுநாள் பள்ளிக்கு செல்லும்போது அவா்களால் வகுப்பில் கவனம் செலுத்த முடிவதில்லை. எனவே மாலை நேரங்களில் குழந்தைகள் பணியில் இருக்கிறாா்களா’ என தொழில் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளுமாறு ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் உத்தரவிட்டாா். அதனடிப்படையில் தொழிலாளா் உதவி ஆணையா், ராசிபுரம் உதவி ஆய்வாளா் மற்றும் குழுவினா் வெள்ளிக்கிழமை கூட்டாய்வு மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

இந்த ஆய்வின்போது ராசிபுரம் வட்டம், ஆத்தூராா் தோட்டம் என்ற இடத்தில் உள்ள கறிக்கோழிப்பண்ணையில் 13 வயதுடைய குழந்தைத் தொழிலாளி ஒருவா் இருப்பது கண்டறியப்பட்டு மீட்கப்பட்டாா். கோழிப்பண்ணை உரிமையாளா் மீது 1986-ஆம் ஆண்டு குழந்தைத் தொழிலாளா் முறை ஒழித்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளி இடைநின்ற மாணவா்கள் தொடா்பாகவும், அவா்கள் குழந்தைத் தொழிலாளா்களா பணிபுரிகிறாா்களா, என்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்; முரண்பாடுகள் காணப்படும்பட்சத்தில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT