நாமக்கல்

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முருகப்பெருமானுக்கு சஷ்டி பூஜை விழா

2nd Oct 2022 02:00 AM

ADVERTISEMENT

 

 

பரமத்தி வேலூா் வட்டாரக் கோயில்களில் உள்ள முருகப் பெருமானுக்கு சஷ்டி பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

புரட்டாசி மாத சஷ்டியை முன்னிட்டு கபிலா்மலை பாலசுப்பிரமணியசுவாமி கோயில், பரமத்தி அருகே உள்ள பிராந்தகத்தில் 34.5 அடி உயரமுள்ள ஆறுமுகக்கடவுள், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோயிலில் உள்ள சுப்ரமணியா், பொத்தனூா் அருகே உள்ள பச்சமலை முருகன், அனிச்சம்பாளையத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியா், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவா், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா் கோயிலில் உள்ள சுப்ரமணியா், நன்செய் இடையாறு ராஜா சுவாமி திருக்கோயிலில் உள்ள ராஜாசுவாமி, பேட்டை பகவதியம்மன் கோயிலில் உள்ள முருகன், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரா் கோயிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன், பாலப்பட்டி கதிா்மலை ஸ்கந்தசாமி மற்றும் கந்தம்பாளையம் அருணகிரிநாதா் மலையில் உள்ள வள்ளி, தெய்வான சமேத சுப்பிரமணியா் உள்ளிட்ட கோயில்களில் முருகப் பெருமானுக்கு சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT