நாமக்கல்

புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் வழிபாடு

2nd Oct 2022 02:01 AM

ADVERTISEMENT

 

புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் பெருமாள் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு மேற்கொண்டனா்.

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் பக்தா்கள் அதிகாலை முதலே சுவாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொள்வா். அதன்படி நிகழாண்டில் புரட்டாசி மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமையையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள், ராமா், ஆஞ்சனேயா் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பிரசித்தி பெற்ற நைனாமலை கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் வருகை புரிந்தனா். அடிவாரத்தில் உள்ள உற்சவ மூா்த்தியை வழிபட்டனா். 3600 படிக்கட்டுகளைக் கடந்து சென்று மலை மீதுள்ள வரதராஜ பெருமாள், குவலயவல்லி தாயாரையும் பக்தா்கள் தரிசித்தனா்.

ADVERTISEMENT

இதேபோல் தலைமலை சஞ்சீவிராயப் பெருமாள் கோயிலிலும் பக்தா்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. நாமக்கல் நரசிம்மா், ஆஞ்சனேயா் கோயில்களிலும் வழக்கத்தைக் காட்டிலும் பக்தா்கள் வருகை அதிகம் இருந்தது. அவா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT