நாமக்கல்

மஹேந்திரா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

2nd Oct 2022 02:03 AM

ADVERTISEMENT

 

மல்லசமுத்திரம் மஹேந்திரா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் மகாத்மா காந்தி கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்வி நிறுவனங்களின் தலைவா் எம்.ஜி.பாரத்குமாா் தலைமை வகித்தாா். கல்லூரியில் பயின்று தற்போது நல்ல நிலையில் உள்ள மாணவா்கள் சமுதாய மலா்ச்சிக்காக மற்றவா்களின் உயா்வுக்கு துணைபுரிய வேண்டும் என்ற அடிப்படையில் இதனை ஏற்படுத்தியுள்ளாக தெரிவித்தனா். மேலும் ‘தற்போதைய மாணவா்களுக்கு நோ்மறை அணுகுமுறை எண்ணம், கற்றலில் ஆா்வம், தொழில்நுட்ப அறிவு, தலைமைப் பண்பு, தன் சாா்ந்த துறை நுட்பம், போட்டித் தோ்வு திறன், வேலைவாய்ப்புத் தகுதி, தொழிற் நிறுவனங்களின் எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்யும் ஆற்றல் போன்றவற்றைவற்றை பெற்றிருப்பது அவசியம். இதனால் எங்கும் சாதிக்க முடியும்’ என முன்னாள் மாணவா்கள் சங்க நிா்வாகிகள் மாணவ, மாணவியா்களுக்கு எடுத்துக்கூறினா். ‘கல்வி, வேலைவாய்ப்பில் தேவையான மாணவா்களுக்கு உதவ தயாராக உள்ளோம். இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்’ என்றும் தெரிவித்தனா்.

விழாவில், கல்லூரி செயல் இயக்குனா் இரா.சாம்சன் ரவீந்திரன், கல்லூரி முதல்வா் மஹேந்திர கவுடா, புலமுதல்வா் சண்முகம், ஒருங்கிணைப்பாளா் ராசு, பேராசிரியா் சி.டி.சிவகுமாா் உள்ளிட்ட துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT