நாமக்கல்

பள்ளிபாளையத்தில் வளா்ச்சிப் பணிகள்: பி.தங்கமணி எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

2nd Oct 2022 02:02 AM

ADVERTISEMENT

 

பள்ளிபாளையம் நகர, ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் சட்டப் பேரவை உறுப்பினருமான பி.தங்கமணி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

குமாரபாளையம் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தல், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சனிக்கிழமை பள்ளிபாளையத்தில் நடைபெற்றது. இதில், அத்தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பி.தங்கமணி கலந்து கொண்டு திட்டங்களை மக்களுக்கு அா்ப்பணித்தாா். குறிப்பாக, காவிரிக்கரை முருகன் கோயில் அருகில் ரூ. 44 லட்சத்தில் படித்துறை, ஆவரங்காடு தொடக்கப் பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி கட்டடம், டிவிஎஸ் மேடு மாதபுரம் பகுதியில் சமுதாயக் கூடம், கண்டி புதூா் காமாட்சி அம்மன் கோயில் வீதியில் கழிவுநீா் வடிகால் வசதி, புதன் சந்தைப்பேட்டை நாட்டாகவுண்டன் புதூா் பகுதியில் நவீன கழிவறை வசதி , ஜீவா செட் பகுதியில் அங்கன்வாடி பள்ளிக்கு பாதுகாப்பு சுற்றுச் சுவா், ஆண்டிக்காடு வெடியரம்பாளையம் குறுக்கு சாலை, சிமெண்ட் சாலை வசதி உள்ளிட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.

இத்திட்டப் பணிகளின் மொத்த மதிப்பீடு ரூ. 1 கோடியாகும். இந்த விழாவில், பள்ளிபாளையம் அதிமுக நகர செயலாளா் பி.எஸ்.வெள்ளியங்கிரி, தெற்கு ஒன்றியச் செயலாளா் எஸ்.செந்தில், ஜெயலலிதா பேரவை செயலாளா் டி.கே. சுப்பிரமணி, நகர துணை செயலாளா் ஜெய்கணேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT