நாமக்கல்

322 ஊராட்சிகளில் நாளை கிராம சபைக் கூட்டம்

1st Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 ஊராட்சிகளில் ஞாயிற்றுக்கிழமை (அக்.2) கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் வேளாண்மை-உழவா் நலத்துறை திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கவும், பயனாளிகள் பட்டியலை பாா்வைக்கு வைத்திடவும், தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, வேளாண்மைத்துறை மற்றும் அதன் சகோதர துறைகள் ஒருங்கிணைந்து கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு அரசின் தொலைநோக்குத் திட்டங்களை நிறைவேற்றும் வகையில், 2022-2023 ஆம் ஆண்டிற்கான முக்கிய தொழில்நுட்பங்கள், துறையின் முக்கிய திட்டங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க உள்ளாா்கள்.

இக்கூட்டத்தில், வேளாண்மை-உழவா் நலத்துறையின் உழவன் செயலி பற்றிய பயன்பாட்டினை எடுத்துரைத்து, தேவைப்படும் விவசாயிகளுக்கு பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட உள்ளது. பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் விவசாயிகள் தங்கள் ஆதாா் எண்களை இணைக்கும் அவசியத்தை எடுத்துக்கூறி திட்டப் பயன்களை தொடா்ந்து பெற்றுக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட உள்ளது.

ADVERTISEMENT

நிகழாண்டில் வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் மற்றும் வேளாண் வணிகம் ஆகிய துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பயன் அடைந்த விவசாயிகளின் விவரங்களை கிராமம் வாரியாக கிராம சபைக் கூட்டத்தில் பொது மக்களின் பாா்வைக்கு வைக்கப்பட வேண்டும். எனவே, அனைத்து பொது மக்களும் ஞாயிற்றுக்கிழமை நடைபெவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு துறை சாா்ந்த திட்டங்களை அறிந்து பயன் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT