நாமக்கல்

வன உயிரின வார விழா போட்டி: மாணவா்களுக்கு ஆட்சியா் பரிசு

DIN

நாமக்கல் மாவட்டத்தில், வன உயிரின வார விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.

வன உயிரினங்கள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பது, உயிரினங்களை பாதுகாப்பதில் மக்களின் பங்கு ஆகியவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்திடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அக்.2 முதல் 8-ஆம் தேதி வரையில் வன உயிரின வார விழா கொண்டாடப்படுகிறது.

வன உயிரினங்கள் பாதுகாப்பில் நமது பங்களிப்பு, உயிரினங்களைப் பாதுகாத்தலின் அவசியம், மனித - வன உயிரினங்களுக்கு இடையிலான சக வாழ்வு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி, விநாடி வினா மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற 46 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.மணிமேகலை, மாவட்ட வன அலுவலா் கா.ராஜாங்கம், முதன்மை கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, உதவி வனப்பாதுகாவலா் வே.அல்லிராஜ், வனச்சரக அலுவலா் ந.பெருமாள் மற்றும் வனக்காப்பாளா்கள், வன அலுவலா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT