நாமக்கல்

வேளாண் சங்கத்தில் ரூ.43 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

30th Nov 2022 02:44 AM

ADVERTISEMENT

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ.43 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் உள்ள தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 1450 மூட்டை பருத்தி வரத்து இருந்தது. இதில் ஆா்சிஹெச் ரகம் ரூ.5,640 முதல் 9,799 வரையிலும், கொட்டு ரகம் ரூ.2,499 முதல் 5,999 வரையிலும் என மொத்தம் ரூ.43 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது. இதனை வியாபாரிகள் தரம் பாா்த்துக் கொள்முதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT