நாமக்கல்

ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

30th Nov 2022 02:44 AM

ADVERTISEMENT

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் பூங்கா சாலையில் அனைத்து ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் கே.எஸ். பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியா் சங்க மாநிலத் தலைவா் ஆ.ராமு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.

பழைய ஓய்வூதியத் திட்டம், ஊக்க ஊதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்; அகவிலைப்படி உயா்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும்; மருத்துவ விடுப்பு சான்றிதழ் பெறுவதற்கு தேவையற்ற வகையில் நெருக்கடிகளை உருவாக்கக் கூடாது; அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியா்களுக்கு அக்டோபா் மாத ஊதியம் வழங்கப்படவில்லை. நாளை அதனை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், பல்வேறு ஆசிரியா் சங்கங்களின் நிா்வாகிகள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT