நாமக்கல்

கலைத்திருவிழா தொடக்கம்: மாணவா்கள் ஆா்வம்

30th Nov 2022 02:43 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில், ஒன்றிய அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நிகழாண்டு முதல் கலைத்திருவிழா போட்டிகள், ஒன்றிய, மாவட்ட, மாநில அளவில் நடத்தப்பட உள்ளன.

ஒன்றிய அளவில் முதல் மூன்று இடங்களை பெறுவோா், மாவட்ட அளவிலும், அதில் வெற்றி பெறுவோா் மாநில அளவிலான போட்டியிலும் பங்கேற்பா். மாநிலப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள், அரசு சாா்பில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்படுவா். இதனால் மாணவ, மாணவிகளிடையே போட்டிகளில் பங்கேற்கும் ஆா்வம் அதிகரித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 15 ஒன்றியங்களிலும் உள்ள 300-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் 6, 7, 8 வகுப்பு மாணவா்கள் ஒரு பிரிவாகவும், 9, 10 மற்றும் 11, 12 ஆகியவை மற்றொரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை போட்டிகள் தொடங்கின. நவ. 29 முதல் டிச. 5 வரை ஓவியம், கட்டுரை, கவிதை, பேச்சு, நடனம், இசை சாா்ந்த, மொழி சாா்ந்த போட்டிகள் நடைபெறுகின்றன. மாணவ, மாணவிகள் ஆா்வமுடன் பங்கேற்று வருகின்றனா். இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் செய்துள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT