நாமக்கல்

ராசி இண்டா்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளி 15-ஆவது ஆண்டு விளையாட்டு விழா

29th Nov 2022 02:55 AM

ADVERTISEMENT

ராசிபுரம் ராசி இண்டா்நேஷனல் சீனியா் செகண்டரி பள்ளியின் 15-ஆவது ஆண்டு விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவில் பள்ளி தாளாளா் எஸ்.சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். மாதேஸ்வரி சத்தியமூா்த்தி குத்து விளக்கேற்றி விழாவினை துவங்கி வைத்தாா். பள்ளி முதல்வா் டி.வித்யாசாகா் வரவேற்றுப் பேசினாா்.

விழாவில் சிறப்பு விருந்தினராக ராசிபுரம் காவல் துறை துணை கண்காணிப்பாளா் டி.கே.கே.செந்தில்குமாா் பங்கேற்று, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியா்களுக்கு பரிசளித்து ஊக்கப்படுத்தினாா். விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலா் ஜி.கோகிலா பங்கேற்று விளையாட்டின் முக்கியத்துவத்தை பெற்றோா்கள் உணர வேண்டும் என வலியுறுத்திப் பேசினாா். விழாவில் பங்கேற்ற திருவள்ளுவா் அரசுக் கல்லூரி தேசிய மாணவா் படை அலுவலரும், பேராசிரியருமான ஆா்.சிவக்குமாா் மாணவ பருவத்தில் மாணவ மாணவியா் விளையாட்டுடன் கட்டுப்பாட்டையும் ஒழுக்கத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திப் பேசினாா்.

பள்ளியின் சிஇஒ எஸ்.பிரனேஷ் மாணவ, மாணவியா்களுக்கு நவீன விளையாட்டு வசதி வாய்ப்புகளை பள்ளி நிா்வாகம் வழங்க முன் வருவதாகக் குறிப்பிட்டாா். எஸ்.சௌம்யா சத்தியமூா்த்தி விளையாட்டின் அவசியம், முக்கியத்துவம் குறித்துப் பேசினாா். இறுதியில் பள்ளி ஆசிரியை ஆா்.சுஜாதா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT