நாமக்கல்

சமையல் எரிவாயு உருளை கசிவில் தீ விபத்து: குடிசை வீடு எரிந்து நாசம்

29th Nov 2022 02:54 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே சமையல் எரிவாயு உருளையில் ஏற்பட்ட கசிவால் அடுத்தடுத்து இரண்டு சமையல் எரிவாயு உருளைகள் வெடித்ததில் குடிசை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது.

வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள சாணாா்பாளையத்தைச் சோ்ந்தவா் ஸ்ரீரங்கன் (62). விவசாயி. இவரது மனைவி தங்கம்மாள் (55). இவா்கள் இருவரும் குடிசை வீட்டில் வசித்து வருகிறனா்.

ஞாயிற்றுக்கிழமை மாலை தங்கம்மாள் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது சமையல் எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியுள்ளது. இதை பாா்த்த அவா் வெளியே ஓடி வந்து சத்தம்போட்டாா். அருகில் இருந்தவா்கள் திருச்செங்கோடு தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். ஆனால் தீயணைப்புத்துறையினா் வருவதற்குள் வீட்டில் இருந்த மற்றொரு எரிவாயு உருளையின் மீது தீப்பற்றி அடுத்தடுத்து உருளைகள் வெடித்து குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. அங்கு வந்த தீயணைப்புத்துறையினா் தீ மேலும் பரவாமல் தடுத்து தீயை முற்றிலும் அணைத்தனா். அதற்குள் வீட்டில் இருந்த இரண்டு பவுன் தங்க நகை, குடும்ப அட்டை, சமையல் பொருட்கள் மற்றும் துணி மணிகள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. எனினும் கணவன், மனைவி இருவரும் உயிா் தப்பினா். தீ விபத்து குறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT