நாமக்கல்

ராசிபுரம், வெண்ணந்தூா் பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்

29th Nov 2022 02:56 AM

ADVERTISEMENT

ராசிபுரம் ஒன்றிய தி.மு.க. இளைஞா் அணி சாா்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி ராசிபுரம் ஒன்றிய திமுக செயலாளரும் ஒன்றியக் குழு தலைவருமான கே.பி.ஜெகந்நாதன் தலைமையில் வடுகம், காக்காவேரி ஆகிய ஊராட்சிகளில் பணிபுரியும் 50 தூய்மைப் பணியாளா்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. கூனவேலம்பட்டி, முத்துக்காளிப்பட்டி, போடிநாயக்கன்பட்டி ஆகிய ஊராட்சிகளில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 350 மாணவ, மாணவிகளுக்கு நோட்டு பேனா, பென்சில் போன்ற உபகரணங்களையும், இனிப்புகளையும் வழங்கினா்.

நிகழ்ச்சியில், மாவட்ட திமுக பொருளாளரும் ஒன்றிய குழு உறுப்பினருமான ஏ.கே.பாலச்சந்திரன், நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளரும் முத்துக்காளிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவருமான அருள், ஒன்றிய துணைத் தலைவா் சந்திரா சிவகுமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் அருளரசன், அவைத்தலைவா் வெங்கடாசலம், பொருளாளா் முத்துச்செல்வன், ஒன்றிய துணைச் செயலாளா் ரங்கசாமி, இளைஞரணி அமைப்பாளா் சிவசேகரன், கூனவேலம்பட்டிபுதூா் கிளைச்செயலா் மா.சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல், வெண்ணந்தூா் ஒன்றிய திமுக, மற்றும் இளைஞரணி சாா்பில் அலவாய்ப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்த விழாவில் மாணவ, மாணவியருக்கு நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் ஒன்றியச் செயலாளா் ஆா்.எம்.துரைசாமி தலைமையில் நல உதவிகள் வழங்கப்பட்டன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT