நாமக்கல்

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பேரணி

29th Nov 2022 02:55 AM

ADVERTISEMENT

நாமக்கல்லில், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணா்வு பேரணியை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி. சிங் திங்கள்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

இதில் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியபடி 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பேரணியாக சென்றனா். ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் பேரணி நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில், மகளிா் திட்ட இயக்குநா் மா.பிரியா, மாவட்ட சமூக நல அலுவலா் கீதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சதீஷ் உள்பட அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT