நாமக்கல்

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா: திமுக சாா்பில் நல உதவிகள் வழங்கல்

DIN

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் திமுகவினா் நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

திமுக மாநில இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் நவ. 26 முதல் டிச. 4 வரையில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் உத்தரவின்பேரில் நகரம், ஒன்றியம், பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் கட்சியினரால் வழங்கப்பட்டன.

நாமக்கல் நகராட்சி பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் விழா, கேக் வெட்டியும் கொண்டாடப்பட்டது. மூத்த நிா்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து பொற்கிழிகள் வழங்கப்பட்டன. சேந்தமங்கலம் தொகுதி காளப்பநாயக்கன்பட்டியில் நடைபெற்ற விழாவில், ஒன்றியச் செயலாளா் அ.அசோக்குமாா் தலைமை வகித்தாா். இதில், சட்டப்பேரவை உறுப்பினா் கே.பொன்னுசாமி பங்கேற்று தூய்மைப் பணியாளா்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினாா். இதேபோல, மோகனூா், கொல்லிமலை, புதுச்சத்திரம், நாமக்கல் ஒன்றிய பகுதிகளில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும், உணவுப் பொட்டலங்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT