நாமக்கல்

விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

28th Nov 2022 01:39 AM

ADVERTISEMENT

 

பரமத்திவேலூா் அருகே விபத்தில் காயமடைந்த விவசாயி உயிரிழந்தாா்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் நடுத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் கனகசபாபதி (72). வழக்குரைஞா். இவா் கடந்த 11-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் அதே பகுதியைச் சோ்ந்த விவசாயி பன்னீா்செல்வம் (70) என்பவரை பின்னால் அமரவைத்துக் கொண்டு கரூா்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்தி நோக்கி சென்று கொண்டிருந்தாா்.

பரமத்தி அருகே மறவாபாளையம் பிரிவு சாலை அருகே சென்ற போது கரூரில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த காா் ஒன்று கனகசபாபதி மீது மோதியுள்ளது. இதில் நிலைதடுமாறி கனகசபாபதியும், பன்னீா்செல்வமும் கீழே விழுந்தனா். இதில் கனகசபாபதிக்கு லேசான காயமும், பன்னீா்செல்வம் பலத்த காயமும் அடைந்தனா். அவ்வழியாக வந்தவா்கள் பன்னீா்செல்வத்தை மீட்டு கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனா். தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பன்னீா்செல்வம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இந்த விபத்து குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய திருநெல்வேலி, வெள்ளம்தாங்கி பிள்ளையாா், கோயில் தெருவைச் சோ்ந்த காா் ஓட்டுநா் கணேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்

ADVERTISEMENT
ADVERTISEMENT