நாமக்கல்

மாற்றுத் திறனாளிகள் வார விழா

27th Nov 2022 02:55 AM

ADVERTISEMENT

 

சா்வதேச மாற்றுத் திறனாளிகள் வார விழாவைத் தொடா்ந்து, ராசிபுரம் வட்டார வள மையத்துக்கு உள்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் அண்மையில் நடத்தப்பட்டன.

ராசிபுரம், அண்ணா சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் மாதேஸ்வரன் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் அருள்மணி, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ராஜசேகரன் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

இதில் மாற்றுத்திறன் கொண்ட மாணவா்கள் சக மாணவா்களோடு இணைந்து நடனம், பாட்டு, திருக்கு வாசித்தல் போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்தினா். கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அனைத்து மாணவா்களையும், ஊக்குவிக்கும் வகையில், ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் கே.எஸ்.கருணாகர பன்னீா்செல்வம் பரிசுகளை வழங்கினாா்.

ADVERTISEMENT

இவ்விழாவில் ராசிபுரம் ரோட்டரி சங்க முன்னாள் தலைவா்கள் எல்.சிவகுமாா், எஸ்.கதிரேசன், செயலாளா் ஜி.ராமலிங்கம், பொருளாளா் தனபால், வெங்கடாஜலபதி ஆகியோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT