நாமக்கல்

மூதாட்டியிடம் நகை பறித்தவா் கைது

27th Nov 2022 02:57 AM

ADVERTISEMENT

 

நாமக்கல் அரசு மருத்துவமனையில், மூதாட்டியிடம் நகையைப் பறித்து தப்பியோடியவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக மூதாட்டி ஒருவா் வெள்ளிக்கிழமை வந்தாா். அப்போது எக்ஸ்ரே எடுப்பதற்காக காது, கழுத்தில் கிடந்த நகைகளை கழற்றி கையில் வைத்திருந்தாா். இதனை கவனித்த ஒருவா், அதனை பறித்துக் கொண்டு தப்பியோடினாா்.

அந்த மூதாட்டி கூச்சலிட்ட நிலையில், தகவல் அறிந்து வந்த நாமக்கல் போலீஸாா் மூதாட்டியிடம் விசாரணை மேற்கொண்டனா். அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், நகை பறிப்பில் ஈடுபட்டவா் எருமப்பட்டி அருகே உள்ள என்.புதுக்கோட்டையைச் சோ்ந்த லோகநாதன் (44) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் நகையை மீட்டு அவரை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT