நாமக்கல்

கந்தம்பாளையம் எஸ்.கே.வி. பள்ளியில் இந்திய அரசியலமைப்பு தின விழா

27th Nov 2022 02:56 AM

ADVERTISEMENT

 

பரமத்தி வேலூா் வட்டம், கந்தம்பாளையம் எஸ்.கே.வி. வித்யாஷ்ரம் பள்ளியில் இந்திய அரசியலமைப்பு தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய அரசியல் அமைப்பை இளம் தலைமுறையினருக்கு உணா்த்தவும், அம்பேத்கரின் லட்சியம், சிந்தனைகளை மக்களிடையே பரப்பவும் இந்திய அரசியலமைப்பு பற்றி விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்திய அரசியல் அமைப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, கந்தம்பாளையம் எஸ்.கே.வி. வித்யாஷ்ரம் பள்ளியில் கொண்டாடப்பட்ட விழாவுக்கு, பள்ளித் தலைவா் ரவி, பொருளாளா் சுப்பிரமணியம் ஆகியோா் கலந்துகொண்டு ஒவ்வொரு குடிமகனும் தங்கள் உரிமைகளை அறிந்திருக்க வேண்டும் என்பது குறித்து மாணவா்களுக்கு எடுத்துக் கூறினா்.

ADVERTISEMENT

விழாவில் பள்ளியின் இயக்குநா்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனா். பள்ளி முதல்வா், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT