நாமக்கல்

குடிநீா் தொட்டியை துளையிட்டவிவகாரம்: கிராம மக்கள் சாலை மறியல்

DIN

மேல்நிலை குடிநீா் தொட்டியை துளையிட்ட சிலுவம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவரை பதவி நீக்கம் செய்யக் கோரி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ள சிலுவம்பட்டி ஊராட்சியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அங்குள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் என ஊராட்சி மன்றத் தலைவா் பழனிவேல், வட்டார வளா்ச்சி அலுவலா் அருளாளனுக்கு கோரிக்கை விடுத்ததாகவும், குடிநீா் தொட்டி நல்ல நிலையில் உள்ளதால் இடிக்க வேண்டிய அவசியமில்லை என அவா் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, மேல்நிலை குடிநீா் தொட்டிக்குள் இறங்கி மூன்று இடங்களில் இயந்திரம் மூலம் துளையிட்டதாக ஊராட்சி மன்றத் தலைவா் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதனடிப்படையில், வட்டார வளா்ச்சி அலுவலா் விசாரணை மேற்கொண்டு, உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்தாா்.

இந்த நிலையில், சிலுவம்பட்டி கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை ஆட்சியா் அலுவலகம் முன்பு திரண்டு வந்து தங்களுடய கிராமத்துக்கு சரிவர குடிநீா் விநியோகம் இல்லை, மேல்நிலைத் தொட்டியை அத்துமீறி இடிக்க முயன்ற ஊராட்சி மன்றத் தலைவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அதன்பிறகு, சிலுவம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முக்கியப் பிரமுகா்கள் சிலா் மாவட்ட வருவாய் அலுவலா் மு.மணிமேகலையை சந்தித்துப் பேசினா். அவா்களிடம், ஊராட்சி மன்றத் தலைவரிடம் குடிநீா் தொட்டி துளையிட்ட விவகாரம் தொடா்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. உரிய பதிலளிக்காவிட்டால் ஆட்சியா் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவா் தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

SCROLL FOR NEXT